ADDED : டிச 31, 2024 06:12 AM

புதுச்சேரி: புதுச்சேரி ஓவியப்பள்ளி சார்பில் ஹெல்மெட் அவசியம் குறித்த மாணவர்களுக்கான விழிப்புணர்வு ஓவியப்போட்டி நடந்தது.
ஓவியப்போட்டியை அருட்சகோதரி மோட்சராகினி துவக்கி வைத்தார். அரசு மற்றறும் தனியார் பள்ளிகளை சார்ந்த 70 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். அதில் 'ஹெல்மெட் அணிவதன் அவசியம்' அவசியம் குறித்து மாணவர்களின் பல்வேறு விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்தனர்.
பின்னர், நடந்த பரிசளிப்பு விழாவில், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் நாகராஜ் கலந்து கொண்டு, சிறந்த ஓவியங்கள் வரைந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
ஓவிய போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் ஹெல்மெட் வடிவிலான சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதில், பேட்ரிக் பள்ளியின் ஆசிரியர் கனகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கலைமாமணி ஓவியர் இபேர் தலைமையில் ஓவியர்கள் செல்வம் எமில், ராமலிங்கம், கார்முகிலன், வரதராஜன், வசந்தி, ஷர்மிளா ஆகியோர் செய்திருந்தனர்.