நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி சவராயலு அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் தேசிய பசுமைப்படை சார்பில் மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
தலைமை ஆசிரியை இந்திரகுமாரி தலைமை தாங்கினார். கலைமாமணி ராஜாராம் வாய் வழியாகவும், மூச்சு வழியாகவும் மாணவிகளுக்கு பாடல் இசைத்து காட்டினார்.
ஓவிய ஆசிரியர் ரவி தலைமையில் மாணவிகளுக்கு, பொம்மலாட்டம், ரங்கோலி, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. தமிழ் ஆசிரியை மணிமொழி நன்றி கூறினார்.

