/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காவல் துறை எழுச்சி தினத்தையொட்டி ஓவிய படைப்புகள் வரவேற்பு
/
காவல் துறை எழுச்சி தினத்தையொட்டி ஓவிய படைப்புகள் வரவேற்பு
காவல் துறை எழுச்சி தினத்தையொட்டி ஓவிய படைப்புகள் வரவேற்பு
காவல் துறை எழுச்சி தினத்தையொட்டி ஓவிய படைப்புகள் வரவேற்பு
ADDED : செப் 27, 2025 02:15 AM
புதுச்சேரி : புதுச்சேரி காவல் துறை எழுச்சி தினத்தையொட்டி நடத்தப்படும் ஓவியப்போட்டிக்கு பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்களிடமிருந்து படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.
புதுச்சேரி காவல் துறையின் எழுச்சி நாள் ஆண்டுதோறும் அக்டோபர் 1ம் தேதி கொண்டாடப்படுகிறது.
புதுச்சேரி காவல் துறையின் எழுச்சி நாளையொட்டி, புதுவை காவலன் புதுமை காவலன் எனும் தலைப்பில் மெகா ஓவியப்போட்டியை நடத்த உள்ளது.
இந்த ஓவியப்போட்டியை புதுச்சேரி காவல் துறை ராம் தங்க நகை மாளிகை, கே.வி., டெக்ஸ் இணைந்து நடத்துகின்றன. முதல் பரிசாக 10 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக 5 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசாக 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. 10 பேருக்கு ஆறுதல் பரிசும் வழங்கப்பட உள்ளது. அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழும் வழங்கப்பட உள்ளது. ஓவியப்போட்டி ஏற்பாடுகள் குறித்து போக்குவரத்து சீனியர் எஸ்.பி., நித்யா ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
புதுச்சேரி காவல் துறையின் பெருமை மிகு அடையாளமான எழுச்சி தினம் வரும் அக்டோபர் 1ம் தேதி கொண்டாடப்படுகின்றது.
இதனையொட்டி, இந்த ஓவிய போட்டியை காவல் துறை சார்பில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டியில் பள்ளி மாணவர்கள், கல்லுாரி மாணவர்கள், மட்டுமின்றி பொதுமக்களும் கலந்து கொள்ளலாம்.
ஓவியப் போட்டியில் கலந்து கொள்ள உள்ள விரும்புவோர், தங்களின் பெயர், முகவரி, தொலைபேசி எண்ணுடன் அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் வரும் 29ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். மேலும் தாங்கள் வரைந்த ஓவியத்தை ஒரு புகைப்படம் எடுத்து ssptrafficpdy@gmail.com இ-மெயில் முகவரிக்கு தங்களின் பெயர், முகவரி, தொலைபேசி எண், ஓவியத்தை ஒப்படைத்த போலீஸ் ஸ்டேஷனின் பெயர் ஆகிய தகவல்களுடன் அனுப்ப வேண்டும்' என்றார்.