தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாகூர் ஒப்பந்ததாரர் பச்சையப்பன் இல்ல திருமண விழா

பாகூர் ஒப்பந்ததாரர் பச்சையப்பன் இல்ல திருமண விழா

பாகூர் ஒப்பந்ததாரர் பச்சையப்பன் இல்ல திருமண விழா


ADDED : ஆக 24, 2026 05:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 24, 2026 05:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர் ஆக. 25–: பாகூர் பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர் பச்சையப்பன் – வள்ளி இல்ல திருமண விழா பாகூர் விஜியவர்த்தினி மகாலில் நடந்தது. 

பாகூர் பங்களா வீதியைச் சேர்ந்த பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர் பச்சையப்பன் – வள்ளி தம்பதியினரின் மகன் சூர்யாவுக்கும், பாகூர் பங்களா வீதி பச்சையப்பன்– முத்துலட்சுமி தம்பதியினரின் மகள்  பிரியதர்ஷினிக்கும், பாகூர் விஜியவர்த்தினி மகாலில் திருமணம் நடந்தது. இதையொட்டி,  முன்னதாக,  கடந்த 22ம் தேதி மாலை 6:00 மணிக்கு, மேல தாளங்கள் முழங்கிட, வாண வேடிக்கையுடன், மணமக்கள் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

அதனை தொடர்ந்து,  23ம் தேதி காலை 7.30 மணிக்கு, மணமக்கள் சூரியா, பிரியதர்ஷினிக்கு திருமணம் நடைபெற்றது. விழாவில், சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்.எல்.ஏ., தனவேல் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். மேலும், விழாவில், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், வியாபாரிகள், அதிகாரிகள்,  உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினர். முன்னதாக, விழாவிற்கு வந்தவர்களை திருமண வீட்டார் வரவேற்று உபசரித்து நன்றி கூறினார். 

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us