ADDED : மார் 29, 2026 04:27 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: நயினார்மண்டபம் திருச்செந்துார் சுப்ரமண்ய கோவிலில், பங்குனி உத்திர விழாவையொட்டி நாளை மறுநாள் (1ம் தேதி) பால்குடம் மற்றும் காவடி உற்சவம் நடக்கிறது.
புதுச்சேரி நயினார்மண்டபம் மூகாம்பிகை நகர் 2வது மெயின் ரோட்டில், உள்ள திருச்செந்துார் சுப்ரமண்ய கோவிலில், நாளை மறுநாள் ( 1ம் தேதி) பங்குனி உத்திர விழா நடக்கிறது. அதையொட்டி, காலை 9:00 மணிக்கு அப்பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் இருந்து பால்குடம் மற்றும் காவடி எடுக்கும் நிகழச்சி நடக்கிறது.
தொடர்ந்து, 10:00 மணிக்கு சுப்ரமண்ய சுவாமிக்கு பாலாபிேஷகம் நடக்கிறது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் செய்யப்பட்டு சுவாமிக்கு தீபாராதனை நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு வள்ளி தேவசேனா சுப்ரமண்ய சுவாமிகள் வீதியுலா நடக்கிறது.
