ADDED : ஆக 29, 2026 07:12 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: கருவடிக்குப்பம் பாத்திமா அரசு உதவிப்பெறும் மேல்நிலைப்பள்ளியில் சார்லஸ் மார்டின் எம்.எல்.ஏ., பனை விதையை நட்டு வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
புதுச்சேரி மார்டின் அறக்கட்டளை மற்றும் பூரணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சாரிட்டபுள் சொசைட்டி இணைந்து, பாத்திமா மேல்நிலைப்பள்ளியில் பனை விதை நடும் நிகழ்ச்சியை நடத்தின. சிறப்பு விருந்தினராக சார்லஸ் மார்டின் எம்.எல்.ஏ., பனை விதையை நட்டு வைத்து அதன் பயன்கள் பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
நிகழ்ச்சியில், பள்ளி முதல்வர் மகிமை தனசுந்தராம்பாள் சாரிட்டபுள் சொசைட்டி நிறுவனர் ஆனந்தன், பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
