ADDED : செப் 15, 2026 05:52 PM
அ நிறம் | அளவு
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் அடுத்த பனையடிக்குப்பம் கிராம ஏரிக்கரை பகுதியில் பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, நீர்நிலைகள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் பனை விதைகள் நடும் பணி நடந்தது.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் விஜயகுமார், ராம் ஆகியோர் பனை விதை நடவு செய்யும் பணியை துவக்கி வைத்தனர். மணக்குள விநாயகர் வேளாண் கல்லுாரி மாணவர்கள் இணைந்து பனை விதைகளை ஏரிக்கரையோரப் பகுதிகளில் 3 கி.மீ தொலைவிற்கு நட்டனர்.
இப்பணியில் வேளாண் கல்லுாரி மாணவர்களான சுரேஷ், தமிழ்மணி, தென்னரசு, திருமுருகன், திருவிகரமன், வேல்முருகன், வெங்கட்ராமன், யுவராஜ் ஆகியோர் பனை விதங்களை கரையின் இருபுறங்களில் நட்டனர்.
