ADDED : நவ 13, 2024 08:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்; புதுச்சேரி நலப்பணிச் சங்கம் சார்பில் குருவிநத்தம் கிராமத்தில் பனை விதை ஊன்றும் நிகழ்ச்சி நடந்தது.
சங்க தலைவர் நல்லாசிரியர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். துணைச் செயலர் விஜயலட்சுமி வரவேற்றார். முன்னாள் துணைச் சேர்மன் தவமுருகன், ரகு, பாலகுரு, குமரன், ஜீவானந்தம் முன்னிலை வகித்தனர்.
பொருளாளர் ஜானகிராமன், துணைச் செயலர் மகேந்திரவேலன், பொறுப்பாளர் அபினேஷ் கருத்துரை வழங்கினர்.
செந்தில்குமார் எம்.எல்.ஏ., நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பாரதிதாசன் அரசுப் பள்ளி மாணவர்கள், ஹாக்கி வீரர்கள் பனை விதைகளை ஊன்றினர்.
தனராஜா நன்றி கூறினார்.