ADDED : அக் 19, 2024 11:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ்., சார்பில், பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ்., ஏழு நாள் சிறப்பு முகாம் துவங்கி நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நெட்டப்பாக்கம் ஏரிக்கரை பகுதியில், ஏரிக்கரை கரைகளை பலப்படுத்தும் நோக்கிலும், ஏரி தண்ணீரை சேமிக்கும் வகையில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் எழில்வேந்தன் தலைமையில், 50க்கும் மேற்பட்ட எஸ்.எஸ்.எஸ்., மாணவர்கள் 500 பனை விதைகள் நட்டனர். ஏரியில் கொட்டப்பட்டிருந்த பிளாஸ்டிக் குப்பைகளை அப்புறப்படுத்தினர்.