/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாண்டெக்ஸ் கைத்தறி கண்காட்சி முதல்வர் ரங்கசாமி துவக்கி வைப்பு
/
பாண்டெக்ஸ் கைத்தறி கண்காட்சி முதல்வர் ரங்கசாமி துவக்கி வைப்பு
பாண்டெக்ஸ் கைத்தறி கண்காட்சி முதல்வர் ரங்கசாமி துவக்கி வைப்பு
பாண்டெக்ஸ் கைத்தறி கண்காட்சி முதல்வர் ரங்கசாமி துவக்கி வைப்பு
ADDED : அக் 19, 2024 01:57 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் பாண்டெக்ஸ் தீபாவளி கைத்தறி கண்காட்சியை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.
புதுச்சேரி, மறைமலை அடிகள் சாலையில் பாண்டெக்ஸ் தீபாவளி கைத்தறி கண்காட்சி நேற்று துவங்கியது. இதில் கைத்தறி சேலைகள், பாலியஸ்டர் சேலைகள், பாலியஸ்டர் பேன்சி சேலைகள், கைத்தறி கைலி, பிரிண்டெட் கைலி வகைகள், பருத்தி மற்றும் பாலியஸ்டர் வேட்டிகள், துண்டுகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், ஜெய்ப்பூர் படுக்கை விரிப்புகள், போர்வைகள், நைட்டிகள் உள்ளிட்ட பல்வேறு ஆடை வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
கண்காட்சியை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்து, முதல் விற்பனையை துவக்கி வைத்தார். இதில் நேரு எம்.எல்.ஏ., கூட்டுறவு செயலர் நெடுஞ்செழியன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் யஷ்வந்தையா உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில் அரசு மானியமாக, 25 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. அரசு ஊழியர்களுக்கு அதிகபட்சம் ரூ.5 ஆயிரத்திற்குள்,5 சம தவணைகளிலும், ரூ.5 ஆயிரத்திற்கு மேல், 10 தவணைகளிலும் திருப்பி செலுத்தும் வகையில் விற்பனை செய்யப்படுகிறது. கண்காட்சி வரும், 30ம் தேதி நிறைவு பெறுகிறது.

