ADDED : அக் 09, 2011 12:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரியில் இருந்து வில்லியனூருக்கு நேற்று பாதயாத்திரை நடந்தது.
வங்கக்கடலில் 1977ம் ஆண்டு உருவான புயல் புதுச்சேரியைத் தாக்குவதாக இருந்தது. இப்புயலில் இருந்து வில்லியனூர் அன்னை, மக்களைக் காப்பாற்றியதாக கூறப்படுகிறது. இந்நிகழ்வினையடுத்து ஒவ்வொரு ஆண்டும் வில்லியனூர் மாதாவிற்கு நன்றி செலுத்தும் விதமாக புதுச்சேரியில் இருந்து வில்லியனூருக்கு பாதயாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டிற்கான பாதயாத்திரை நேற்று துவங்கியது. மிஷன் வீதி ஜென்மராக்கினி மாதா கோவிலிலிருந்து புறப்பட்ட பாதயாத்திரையை, பாதிரியார் அருளானந்தம் துவக்கி வைத்தார். பிச்சமுத்து வழிநடத்தினார். இதில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர். வில்லியனூர் லூர்து அன்னை ஆலயத்தில் பாத யாத்திரை நிறைவடைந்தது.

