/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குவாண்டம் ஒருங்கிணைப்பு குறித்த குழு விவாதம்
/
குவாண்டம் ஒருங்கிணைப்பு குறித்த குழு விவாதம்
ADDED : நவ 13, 2025 06:49 AM

புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மின்னணு மற்றும் தொடர்பியல் பொறியியல் துறைசார்பில், 'குவாண்டம் ஒருங்கிணைப்பு - சாத்தியநிலைகளை நிகழ் நிலையில் மாற்றும் பரிமாற்றம்' தலைப்பில் 25வது குழு விவாதம் நேற்று நடந்தது.
பல்கலைக் கழக துணை வேந்தர் மோகன் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். துறைத் தலைவர் குமார் வரவேற்றார்.
பேராசிரியர் ஜெயந்தி அறிமுக உரையாற்றினார். மின்னணுவியல் துறை பேராசிரியர் நக்கீரன்,பெங்களூரு அனுதந்திரா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெயக்குமார் வைத்திய சங்கர், பெங்களூரு குவாண்டம் ஆராய்ச்சி கூடத்தின் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரிகள் கார்த்தி கணேஷ்துரை, தர்ஷன்குமார், பல்கலைக்கழக அடல்தொழில் முனைவு வளர்ப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விஷ்ணுவர்தன் ஆகியோர் கருத்துரைவழங்கினர்.
கல்வி மற்றும் தொழில்துறையை சார்ந்தவர்கள்குவாண்டம் ஒருங்கிணைப்பின் பல்வேறு பரிணாமங்கள், தேசிய மற்றும் உலக அளவில் அதன் தற்போதைய,எதிர்க்கால நிலை குறித்து கலந்துரையாடினர்.
மேலும், ஆராய்ச்சி மற்றும் தொழில் முனைவோரை ஊக்குவிக்க மத்திய அரசு வகுத்துள்ள திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில், துறையின் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
பேராசிரியர் சந்தானலட்சுமி நன்றி கூறினார்.

