ADDED : ஏப் 02, 2026 05:46 AM
அ நிறம் | அளவு
நெட்டப்பாக்கம்: சொரப்பூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில், 108 பால்குட அபி ேஷகம் நடந்தது.
நெட்டப்பாக்கம் அடுத்த சொரப்பூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நேற்று காலை பக்தர்கள் 108 பால்குடங்களை ஏந்தி ஊர்வலமாக வந்து, சுவாமிக்கு பால் அபி ேஷகம் செய்தனர். தொடர்ந்து காவடி உற்சவம் நடந்தது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
