/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாசிக், பாப்ஸ்கோ ஊழியர்கள் சட்டசபையை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு
/
பாசிக், பாப்ஸ்கோ ஊழியர்கள் சட்டசபையை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு
பாசிக், பாப்ஸ்கோ ஊழியர்கள் சட்டசபையை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு
பாசிக், பாப்ஸ்கோ ஊழியர்கள் சட்டசபையை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு
ADDED : பிப் 22, 2024 06:42 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் பாசிக், பாப்ஸ்கோ ஊழியர்கள் நிலுவை சம்பளத்தை வழங்கக்கோரி, சட்டசபையை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரி பாசிக், பாப்ஸ்கோ ஊழியர்கள் நிலுவை சம்பளம் கேட்டும், அந்த நிறுவனங்களை தொடர்ந்து நடத்த வலியுறுத்தியும், ஏ.ஐ.டி.யு.சி., சார்பில், நேற்று சட்டசபையை முற்றுகையிடுவதாக, அறிவித்திருந்தனர்.
இதையொட்டி, நேற்று காலை பாலாஜி தியேட்டர் அருகே, அந்த நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள் ஒன்று திரண்டனர். அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு நேரு வீதி, மிஷன் வீதி வழியாக சட்டசபை நோக்கி சென்றனர்.
ஜென்மராக்கினி மாதா கோவில் எதிரே, பெரியகடை போலீசார், பேரிகார்டுகள் அமைத்து, அவர்களை தடுத்தனர். தடுப்பை மீறி, சட்டசபையை நோக்கி முன்னேற முயன்றதால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, தரையில் அமர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி மாநில பொதுச்செயலாளர் சேது செல்வம் தலைமை தாங்கினார். பாசிக் சங்க பொறுப்பாளர்கள் முத்துராமன், ரமேஷ், தரணிராஜன், கோவிந்தராஜ், மூர்த்தி, பாப்ஸ்கோ சங்க பொறுப்பாளர்கள் ரமேஷ், ஜெய்சங்கர், பிரபு முன்னிலை வகித்தனர்.
ஏ.ஐ.டி.யு.சி., மாநில கவுரவ தலைவர் அபிேஷகம், பொருளாளர் அந்தோணி, மாநில செயலாளர் செல்வம், தயாளன் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர்.
இந்த விவகாரத்தில், அரசு காலம் கடத்தாமல், சட்டசபை கூட்டத்தொடரில், பாப்ஸ்கோ, பாசிக் நிறுவனங்கள் சம்மந்தமாக ஊழியர்களை பாதிக்காத வகையில் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். சிறிது நேரத்திற்கு பின், அனைவரும் கலைந்து சென்றனர்.