தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பால் விலையை உயர்த்த கோரி பாண்லே ஊழியர்கள் போராட்டம்

பால் விலையை உயர்த்த கோரி பாண்லே ஊழியர்கள் போராட்டம்

பால் விலையை உயர்த்த கோரி பாண்லே ஊழியர்கள் போராட்டம்


UPDATED : நவ 26, 2026 07:24 PM

ADDED : நவ 26, 2026 07:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 26, 2026 07:24 PM ADDED : நவ 26, 2026 07:22 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பால் விலையை உயர்த்தி கோரி பாண்லே தொழிற்சாலையில், அனைத்து தொழிற்சங்கள் இணைந்து கருப்பு பேட்ச் அணிந்து தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குருமாம்பட்டு பாண்லே தொழிற்சாலையில், பாண்லே தொழிலாளர்கள் சங்கம், தொ.மு.ச., பாண்லே ஓட்டுநர்கள், நாம் தமிழர் தொழிற்சங்கம், என்.ஆர்., டி.யு.சி., பாண்லே எஸ்.சி., எஸ்.டி., தொழிற்சங்கம், பாண்லே எம்பிளாயர் யூனியன் உள்ளிட்ட சங்கங்கள் இணைந்து தொழிலாளர்கள் கருப்பு பேட்ச் அணிந்து நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில், பால் விலையை 60 ரூபாயாக உயர்த்த வேண்டும். பால் கொள்முதல் விலையை 46 ரூபாயாக உயர்த்துவது, தீவன உற்பத்தி ஆலையை மீண்டும் இயக்கி பால் ஊற்றும் விவசாயிகளுக்கு மானிய விலையில் தீவனத்தை மாதம், மாதம் வழங்க வேண்டும்.

80 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வரும் பாண்லே நிறுவனத்தை அரசு காப்பாற்ற வேண்டும். பால் உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு மானிய விலையில் பசு மாடுகள் வழங்க வேண்டும். பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தரமற்ற மிஷின்களை வாங்கி நஷ்டத்தை ஏற்படுத்திய அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூட்டுறவு பதிவாளர் அலுவலகம் மற்றும் இதர அலுவலகத்தில் செலவிடப்படும் பணத்தை பாண்லேவில் இருந்து வழங்காதே உள்ளிட்ட பல்வேறு கோரிக்களை வலியுறுத்தி பாண்லே ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us