தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ரியல் எஸ்டேட் உரிமையாளர் வீட்டில் திருடிய பரமக்குடி நபர்கள் கைது

ரியல் எஸ்டேட் உரிமையாளர் வீட்டில் திருடிய பரமக்குடி நபர்கள் கைது

ரியல் எஸ்டேட் உரிமையாளர் வீட்டில் திருடிய பரமக்குடி நபர்கள் கைது


ADDED : மார் 11, 2024 05:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 11, 2024 05:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம், : ரியல் எஸ்டேட் உரிமையாளர் வீட்டில் நகை, பணம் திருடிய பரமக்குடியை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

முதலியார்பேட்டை, நுாறடி சாலை ஜான்பால் நகரை சேர்ந்தவர் ஜோதி, 44; புதுச்சேரியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது குடும்பத்தினர் சொந்த ஊரான ஊட்டியில் வசிக்கின்றனர். ஜோதி மட்டும் தங்கி தொழில் செய்து வருகிறார்.

கடந்த 25ம் தேதி இரவு 12:30 மணியளவில், நுாறடி சாலை, ஆர்.டி.ஓ., அலுவலகம் வழியாக தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக காரில் வந்த இருவர், அவரிடம் இங்கு தங்குவதற்கு விடுதி உள்ளதா என கேட்டனர்.

இரவு 1:00 மணி ஆனதால், இனிமேல் விடுதி கிடைக்காது என, அவர் கூறியதை அடுத்து, நாங்கள் வெளியூரில் இருந்து வருகிறோம். இரவு மட்டும் உங்கள் வீட்டில் தங்கி விட்டு காலையில் செல்கிறோம்' என, கூறினர்.

அவர்கள் மீது அனுதாபப்பட்டு ஜோதி தனது வீட்டில் தங்க வைத்தார். காலையில் எழுந்து பார்த்தபோது, தங்கியிருந்த இருவரையும் காணவில்லை.

அவர்கள் எடுத்து வந்த காரும் இல்லை. வீட்டில் பீரோவில் இருந்த 4 சவரன் நகை, 50 ஆயிரம் ரொக்கத்தை அவர்கள் திருட்டி சென்றது தெரிய வந்தது.

அவர் அளித்த புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், ஏட்டு சரணவன் ஆகியோர் வழக்கு பதிந்து, அங்குள்ள சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து, ஜோதியிடம் அந்த நபர்கள் கொடுத்த மொபைல் எண்ண வைத்து, அவர்கள் இருக்கும் இடத்தை டவர் மூலம் போலீசார் கண்காணித்தனர். அவர்கள் நுாறடி சாலை, தனியார் பள்ளி அருகே ஒரு விடுதியில் தங்கியிருந்தது தெரியவந்தது.

போலீசார் அங்கு விரைந்து இருவரையும் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள், பரமக்குடியை சேர்ந்த சபரி, 34; சந்திரசேகர், 38; என தெரியவந்தது. அவர்களிடம் இருந்து, கார், 4 சவரன் நகை, 50 ஆயிரம் ரொக்கம், ஒரு பைக், மொபைல் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இருவரையும், கோர்ட்டில், ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us