/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டில்லிக்கு பார்சல் சேவை ரயில்வேயில் நிறுத்தம்
/
டில்லிக்கு பார்சல் சேவை ரயில்வேயில் நிறுத்தம்
ADDED : அக் 15, 2025 11:10 PM
புதுச்சேரி: டில்லிக்கு ரயில் பார்சல் சேவை ரத்தானதால், தீபாவளி பண்டிகை பொருட்கள் புதுச்சேரியில் இருந்து லாரியில் அனுப்பப்பட்டு வருகிறது.
புதுச்சேரியில் இருந்து டில்லிக்கு வாரந்தோறும் புதன்கிழமை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் வாரந்தோறும் 2 டன் அளவிற்கு பொருட்களை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் டில்லிக்கு அனுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு டில்லி ரயில் நிலையத்தின் பாதுகாப்புக் கருதி வரும் 17ம் தேதி முதல் 10 நாட்களுக்கு பார்சல் சேவையை நிறுத்தியுள்ளது.
அதனையொட்டி, புதுச்சேரியில் இருந்து நேற்று டில்லிக்கு புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயிலில், பார்சல் சேவை நிறுத்தப்பட்டது. இதனால், டில்லிக்கு வழக்கமாக ரயிலில் பொருட்களை அனுப்பிய வியாபாரிகள் தீபாவளி வியாபாரத்திற்கான பொருட்களை கூடுதல் செலவில் லாரிகளில் டில்லிக்கு அனுப்பி வைத்தனர்.