ADDED : அக் 01, 2024 06:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: சின்ன கரையாம்புத்துார் அரசு துவக்கப் பள்ளியில் பெற்றோர்கள் ஆசிரியர்கள் சங்க கூட்டம் நடந்தது.
பள்ளி தலைமையாசிரியர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஆசிரியை சந்தியா வரவேற்றார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவி விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பள்ளியின் இந்தாண்டு செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
தொடர்ந்து நடந்த கனி திருவிழாவில், கனிகளால் ஏற்படும் நன்மைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.