/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இரட்டை குடியுரிமை விவகாரம் ஜிப்மருக்கு பெற்றோர் சங்கம் கண்டனம்
/
இரட்டை குடியுரிமை விவகாரம் ஜிப்மருக்கு பெற்றோர் சங்கம் கண்டனம்
இரட்டை குடியுரிமை விவகாரம் ஜிப்மருக்கு பெற்றோர் சங்கம் கண்டனம்
இரட்டை குடியுரிமை விவகாரம் ஜிப்மருக்கு பெற்றோர் சங்கம் கண்டனம்
ADDED : டிச 06, 2024 06:51 AM
புதுச்சேரி : ஜிப்மர் இரட்டை குடியுரிமை விவகாரத்தில் புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சங்கத்தின் தலைவர் நாராயணசாமி அறிக்கை:
ஜிப்மரில் இரட்டை குடியுரிமை பெற்று சேரும் மாணவர்களை கண்டறிந்து அனைத்து சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்கத்தின் சார்பாக புகார் அளிக்கப்பட்டது. புகாரை சுகாதாரத்துறை உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தது.
இரட்டை குடியுரிமை பெற்றுள்ள மாணவர்களை நீக்கி தகுதியான மாணவர்களை சேர்க்க சென்டாக் நிர்வாகத்திற்கும், ஜிப்மர் நிர்வாகத்திற்கும் உத்தரவிட்டு கடிதம் அனுப்பப்பட்டது.
ஆனால், ஜிப்மர் நிர்வாகம் முறைகேடாக இரட்டை குடியுரிமை பெற்று சேரும் மாணவர்களை நீக்க மறுப்பதுடன் காலதாமதத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
அவர்களுக்கு ஆதரவாக ஜிப்மர் செயல்படுவது கண்டிக்கதக்கது. புதுச்சேரிக்கான தகுதி பட்டியலை சுகாதாரத்துறை ஒப்புதல் பெற்று மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்.
ஜிப்மர் இரட்டை குடியுரிமை நீக்கல் விவகாரத்தில், காலதாமதம் செய்வதால் புதுச்சேரி அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.