/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காலி பணியிடங்களை நிரப்ப பெற்றோர் சங்கம் மனு
/
காலி பணியிடங்களை நிரப்ப பெற்றோர் சங்கம் மனு
ADDED : மார் 17, 2025 02:41 AM
புதுச்சேரி: சுகாதாரத்துறையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநில மாணவர்கள் மற்றும் பெற்றோர் சங்கம் தலைவர் பாலசுப்ரமணியன், முதல்வர் ரங்கசாமியிடம் அளித்த மனு;
புதுச்சேரியில் கடந்த 2018--19ம் ஆண்டு தேசிய சுகாதார இயக்குனரகம் மூலம் முறைகேடாக வாங்கப்பட்ட மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் ரூ. 3 கோடிக்கு ஊழல் நடந்துள்ளதாக, புதுச்சேரி லஞ்சம் மற்றும் ஊழல் கண்காணிப்பு காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வழக்கில், கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த காலங்களில் வாங்கப்பட்ட எம்.ஆர்.ஐ., ஸ்கேன், அல்ட்ரா சவுண்டு ஸ்கேன், மற்றும் மற்ற உபகரணங்கள் அரசு இ-வணிகம் வாங்கப்பட்டாலும், மேற்படி உபகரணங்களில் ஏதேனும் முறைகேடுகள் நடந்துள்ளதா என்பதை விசாரிக்க வேண்டும்.
யு.பி.எஸ்.சி., யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அனுமதி பெற்று நிரந்தர தகுதியுள்ள மருத்துவர்களை நியமிக்க வேண்டும். புதுச்சேரியில் காலியாக உள்ள செவிலியர், டெக்னீஷியன், உதவியாளர் பணியிடங்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.