தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பி.எஸ்.சி., நர்சிங் தேர்வை தள்ளி வைக்க பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை

 பி.எஸ்.சி., நர்சிங் தேர்வை தள்ளி வைக்க பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை

 பி.எஸ்.சி., நர்சிங் தேர்வை தள்ளி வைக்க பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை


ADDED : ஜூன் 06, 2026 04:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 06, 2026 04:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி சுகாதாரத்துறை மற்றும் சென்டாக் நிர்வாகம் பி.எஸ்.சி., நுழைவு தேர்வினை தள்ளி வைக்க வேண்டும் என, புதுச்சேரி மாநில மாணவர்கள் மற்றும் பெற்றோர் நலச்சங்க தலைவர் பாலா கோரிக்கை வைத்துள்ளார்.

அவரது அறிக்கை:

புதுச்சேரி அரசு ஒதுக்கீட்டில் பி.எஸ்.சி., நரச்சிங் படிப்புக்கு 1300 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு வரும் 14ம் தேதி புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் பகுதிகளில் தேர்வு நடக்கிறது.

நீட் மறு தேர்வு வரும் 21ம் தேதி நாடு முழுதும் நடைபெற உள்ளது.

அதேபோல் புதுச்சேரி அரசால் எல்.டி.சி., தேர்வு வரும் 28ம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பாக பல்வேறு அமைப்புகள் சார்பில், பி.எஸ்.சி., நர்சிங் தேர்வை தள்ளி வைக்கக்கோரி புதுச்சேரி அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

ஆனால் சுகாதாரத்துறை மற்றும் சென்டாக் நிர்வாகம் நீட் நுழைவுத் தேர்வு மற்றும் எல்.டி.சி., நுழைவுத்தேர்வுகள் பாதிக்காத வகையில் ஜூலை முதல் வாரத்தில் செவிலியர் படிப்பிற்கான தேர்வினை நடத்த வேணடும் என, கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us