/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இருமல் சிரப்புகளை தடை செய்ய பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தல்
/
இருமல் சிரப்புகளை தடை செய்ய பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தல்
இருமல் சிரப்புகளை தடை செய்ய பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தல்
இருமல் சிரப்புகளை தடை செய்ய பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தல்
ADDED : அக் 05, 2025 03:02 AM
புதுச்சேரி : தமிழக சுகாதாரத்துறை மற்றும் மருந்துகள் கட்டுப்பாட்டு மையத்தால் தடை செய்யப்பட்டுள்ள இருமல் மற்றும் சளி சிரப்புகள் புதுச்சேரியில் விற்க தடை விதிக்க வேண்டும் என, புதுச்சேரி மாநில மாணவர்கள் மற்றும் பெற்றோர் நலச் சங்கத் தலைவர் பாலா கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் கம்பெனியில் தயாரிக்கப்பட்ட இருமல் சிரப்பை குடித்த மத்திய பிரதேசத்தில் 7 குழந்தைகள், ராஜஸ்தானில் 2 குழந்தைகள் இறந்தனர்.
அதையடுத்து சம்மந்தப்பட்ட இருமல் சிரப்பை மத்திய சுகாதாரத்துறை தடை செய்துள்ளது.
எனவே, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள மொத்த மருந்து கொள்முதல் நிலையங்கள், மருத்துவமனைகள், மருந்துகடைகளில் இந்த சிரப்பினை உடனடியாக தடைசெய்ய வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.