ADDED : ஏப் 13, 2026 04:14 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: மூத்த குடிமக்கள் நலவாழ்வு சங்கம் மற்றும் சாய் கிருபா மருத்துவமனை சார்பில், நடந்த மருத்துவ முகாமில், முதியவர்கள் பயனடைந்தனர்.
கடலுார் சாலை, சாய் கிருபா மருத்துவமனையில் நடந்த மருத்துவ முகாமில், சங்க தலைவர் வேணுகோபால், செயலாளர் கிருஷ்ணராஜ், செயலாளர் செல்வராஜ், பொருளாளர் ராமலிங்கம், கவுரவத் தலைவர் தேவநாதன், துணை தலைவர் நளினி முன்னிலை வகித்தனர்.
முகாமில் மூத்த குடிமக்கள், சங்க உறுப்பினர்களுக்கு, எலும்பு உறுதி தன்மை அறிதல், ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு ஆகிய பரிசோதனைகள் செய்யப்பட்டது. மருத்துவர் சிவதாசன் கொண்ட குழுவினர் மருத்துவ ஆலோசனை நடத்தினர்.
