/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இனிப்பு வழங்கி பா.ஜ., கொண்டாட்டம்
/
இனிப்பு வழங்கி பா.ஜ., கொண்டாட்டம்
ADDED : அக் 09, 2024 11:01 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: ஹரியானா சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றதை முன்னிட்டு, புதுச்சேரியில் பா.ஜ.,வினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
பா.ஜ., ஹரியானா சட்டசபைத் தேர்தலில், அதிக இடங்களை வென்று வெற்றியை பெற்றுள்ளது.
இதையொட்டி, புதுச்சேரி மாநில பா.ஜ., சார்பில் நிர்வாகிகள் இந்திரா காந்தி சிலை அருகே பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
இதில், ஜான்குமார் எம்.எல்.ஏ., மாநில பொதுச் செயலாளர்கள் மோகன்குமார், மவுலிதேவன், செயலாளர் வெற்றிசெல்வன், மாவட்ட தலைவர் தண்டபாணி உள்ளிட்ட மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

