ADDED : டிச 26, 2024 05:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: நோணாங்குப்பம் படகு குழாமில், ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட படகுகள் இயக்கப்பட்டன. கடந்த 2ம் தேதி, ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில், 5 படகுகள் அடித்து செல்லப்பட்டன. மற்ற படகுகள் பழுதாகி உள்ளன.
படகு குழாமில் இருந்து பாரடைஸ் பீச்சிற்கு நேற்று 4 படகுகள் மட்டுமே இயக்கப்பட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி, படகு சவாரி செய்ய வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். போதிய படகு இல்லாததால், சுற்றுலாப் பயணிகள் வெகு நேரம் காத்திருந்து அவதியடைந்தனர்.