/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பட்டா பெயர் மாற்றம் சிறப்பு முகாம்: கலெக்டர் பங்கேற்பு
/
பட்டா பெயர் மாற்றம் சிறப்பு முகாம்: கலெக்டர் பங்கேற்பு
பட்டா பெயர் மாற்றம் சிறப்பு முகாம்: கலெக்டர் பங்கேற்பு
பட்டா பெயர் மாற்றம் சிறப்பு முகாம்: கலெக்டர் பங்கேற்பு
ADDED : நவ 08, 2024 05:14 AM

காரைக்கால்: காரைக்காலில் மக்களை தேடி மாவட்ட கலெக்டர் என்ற திட்டத்தின் கீழ் பட்டா பெயர் மாற்றம் குறித்து சிறப்பு முகாம் கலெக்டர் மணிகண்டன் தலைமையில் நடந்தது.
காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்களை தேடி மாவட்ட கலெக்டர் என்ற செயல் திட்டத்தின் கீழ் நேற்று திருநள்ளாறு மற்றும் நெடுங்காடு கொம்யூன் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் சுவாமி காத்திருப்பு வளாகத்தில் பட்டா பெயர் மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் கலெக்டர் மணிகண்டன் தலைமையில் நடந்தது.
முகாமில் துணை கலெக்டர் (வருவாய்) அர்ஜுன் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
மேலும் மாவட்ட வருவாய் துறை சார்ந்த அனைத்து அதிகாரிகளும் மக்களிடம் மனுக்களை பெற்று உடனுக்குடன் பட்டா பெயர் மாற்றம் செய்து கொடுத்தனர். அதிகாரிகள் பொதுமக்களிடம் பட்டா பெயர் மாற்றம் குறித்து தகுந்த ஆலோசனைகளை வழங்கினார்.
பின்னர் கலெக்டர் மணிகண்டன் பொதுமக்களுக்கு பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட்டு 40 பட்டாக்கள் வழங்கினார்.இதில் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.