/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இயற்கையான பொருட்களில் பட்டாபிேஷக ராமர் பொம்மை: அரசு பள்ளி மாணவி அசத்தல்

ADDED : ஜன 20, 2024 06:02 AM

புதுச்சேரி : அரசு பள்ளி மாணவி இயற்கை பொருட்களை கொண்டு பட்டாபிஷேக ராமர் பொம்மையை உருவாக்கி உள்ளார்.
புதுச்சேரி, கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு வாரந்தோறும் கைவினை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
பயிற்சி பெற்ற 9ம் வகுப்பு மாணவி சவுமியா, இயற்கையாக கிடைக்க கூடிய தேங்காய் நகர், பனை ஓலை, குருமி, சோளக் கதிர் ஆகியவற்றை கொண்டு ராமர், லட்சுமணன், சீதை, ஆஞ்சநேயர் ஆகியோர் கொண்ட பட்டாபிஷேக ராமர் பொம்மையை உருவாக்கி உள்ளார்.
ராமர் பொம்மை உருவாக்கிய பள்ளி மாணவி மற்றும் வழிகாட்டி நுண்கலை ஆசிரியர் உமாபதி ஆகியோரை, பள்ளி முதல்வர் மோகன்பிரசாத் பாராட்டினார்.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடக்க உள்ள நிலையில், அரசு பள்ளி மாணவி இயற்கை பொருட்களை கொண்டு பட்டாபிஷேக ராமர் உருவாக்கியதை பலரும் பாராட்டி வருகின்றனர்.