தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஏழை மாணவர்களுக்கு கல்வி கட்டணம் வழங்கல்

 ஏழை மாணவர்களுக்கு கல்வி கட்டணம் வழங்கல்

 ஏழை மாணவர்களுக்கு கல்வி கட்டணம் வழங்கல்


ADDED : பிப் 08, 2026 04:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2026 04:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார்: பியூச்சர் இந்திய அறக்கட்டளை சார்பில், ஏழை மாணவர்களுக்கு கல்வி நிதியுதவிகளை மத்திய இணை அமைச்சர் முருகன் வழங்கினார்.

புதுச்சேரி பியூச்சர் இந்தியா அறக்கட்டளை, ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, புதுச்சேரியை சேர்ந்த ஒரு பெற்றோர் மட்டும் உள்ள மாணவர்களின் கல்வி கட்டணமாக சுமார் ரூ. 75 லட்சம் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி வில்லியனுார் தனி யார் ஓட்டலில் நடந்தது.

விழாவில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை இணை அமைச்சர் முருகன் பங்கேற்று, ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி கட்டண நிதியுதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் நமச்சிவாயம், முன்னாள் அமைச்சர் சாய்சரவணன் குமார், பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ஏற்பாடுகளை பியூச்சர் இந்திய அறக்கட்டளை நிறுவன தலைவர் ராஜமனோகரன் தலைமையில் நிர்வாகிகள் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us