ADDED : ஜன 13, 2025 03:56 AM
புதுச்சேரி: பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் பாவேந்தர் கலை இலக்கிய திங்கள் விழா, பாவேந்தரின் பைந்தமிழ் பொங்கல் என்ற தலைப்பில் பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் நடந்தது.
அறக்கட்டளை தலைவர் பாரதி தலைமை தாங்கினார். செயலர் வள்ளி, கிருஷ்ணகுமார், நமச்சிவாயம், மண்ணாங்கட்டி, சரசுவதி வைத்தியநாதன், ராஜஸ்ரீமகேஷ், விசாலாட்சி, சரசா, ஜெயந்தி ராஜவேலு, ஸ்ரீதேவி ஜவகர், டாக்டர் கார்த்திகேயன், ஆளவந்தார் சித்தன் முன்னிலை வகித்தனர். கலை பண்பாட்டு துறை இயக்குநர் கலியபெருமாள், கலால் துறை முன்னாள் துணை ஆணையர் சண்முகசுந்தரம் பாராட்டி பேசினர். கண்மணி கிரியேஷன்ஸ் ராஜா வாழ்த்துரை வழங்கினார்.
திருக்குறளில் இல்லாததில்லை என்ற தலைப்பில் திருவள்ளுவர் திருநாள் சிறப்பு கவியரங்கம் நடந்தது. பலர் கவிதை வாசித்தனர். பைரவி, மதன், பொய்யாது ஏகாம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பேராசிரியர் புவனேஸ்வரி ரகுராமன், மகளிர் இலக்கிய மறுமலர்ச்சி என்ற தலைப்பில் உரையாற்றினார். முன்னதாக வேல்விழி சிவக்கொழுந்து வரவேற்றார். மீனாட்சி தேவி நன்றி கூறினார்.