ADDED : ஜன 06, 2024 06:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : தவளக்குப்பம் நான்கு முனை சந்திப்பு உள்ள பெட்டிக்கடையில் குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக தவளக்குப்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன் பேரில் சப் இன்ஸ் பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் நேற்று அக்கடையில் சோதனை செய்தனர்.கடையில் இருந்து ரூ.2000 மதிப்புள்ள 200 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
பின் பெட்டி கடை உரிமையாளர் தவளக்குப்பம் கொருக்கன்மேட்டை சேர்ந்த சுந்தரம் மீது வழக்கு பதிந்து, போலீசார் அபராதம் விதித்தனர்.