/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போதையில் பைக் ஓட்டியவர்களுக்கு அபராதம் விதிப்பு
/
போதையில் பைக் ஓட்டியவர்களுக்கு அபராதம் விதிப்பு
ADDED : அக் 02, 2024 08:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : போலீசார் வாகன சோதனையில், மது போதை மற்றும் ஆவணங்கள் இன்றி பைக்கில் வந்தவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
ஒதிஞ்சாலை, சோனாம்பாளையம் சந்திப்பு சாலையில், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் நேற்று இரவு வாகன சோதனை செய்தனர். அந்த வழியாக, போதையில் பைக் ஓட்டி வந்தவர்களை பிடித்து அபராதம் விதித்தனர்.
மேலும், பைக்கில் ஆவணங்கள் இல்லாமல் வந்தவர்கள், மொபைல் போன் பேசியபடியும், ஒரு பைக்கில் மூன்று பேர் உட்கார்ந்து வந்தவர்களை போலீசார் பிடித்து அபராதம் விதித்தனர்.

