தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 29ம் தேதிக்குள் வாழ்வாதார உறுதி சான்றிதழ் ஓய்வூதியர்கள் சமர்ப்பிக்க அறிவுறுத்தல்

 29ம் தேதிக்குள் வாழ்வாதார உறுதி சான்றிதழ் ஓய்வூதியர்கள் சமர்ப்பிக்க அறிவுறுத்தல்

 29ம் தேதிக்குள் வாழ்வாதார உறுதி சான்றிதழ் ஓய்வூதியர்கள் சமர்ப்பிக்க அறிவுறுத்தல்


ADDED : ஏப் 17, 2026 11:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2026 11:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஓய்வூதியர்கள் மே 29ம் தேதிக்குள், வாழ்வாதார உறுதிச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என, கணக்கு மற்றும் கருவூலக இயக்ககம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரி அரசு கணக்கு மற்றும் கருவூலக இயக்கக செய்திக்குறிப்பு:

புதுச்சேரி அரசு, கருவூலக அலுவலகங்களின் வாயிலாக ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களின் (புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் மண்டலங்களில் உள்ளவர்கள்) 2026-2027ம் ஆண்டிற்கான, வாழ்வாதார உறுதிச் சான்றிதழை வரும் முதல் 29ம் தேதிக்கும் சமர்ப்பிக்க வேண்டும்.

கருவூலகத்திற்கு நேரில் வந்தும் அல்லது முறைப்படி அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரி அளித்த சான்றிதழின் மூலமாகவும், அல்லது இந்திய அரசின் ஜீவன் பிரமாண் என்ற வலைதளத்தின் மூலமாகவும் (www.jeevan.pramaan.gov.in) அல்லது தபால் அலுவலகத்தின் வாசற்படி சேவையை பயன்படுத்தியும் பதிவு செய்யலாம்.

அது மட்டுமின்றி, ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள், கருவூல அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டிய தேவையை நீக்கி , மொபைல் சாதனங்களில் ஆதார் அடிப்படையிலான முக அங்கீகாரத்தைப் பயன்படுத்தி, தங்களின் வருடாந்திர டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை பாதுகாப்பாகச் சமர்ப்பிக்க, ஜீவன் பிரமாண் மொபைல் செயலி வழியாகப் பதிவு செய்துகொள்ளும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.

நாடு முழுதும் செயல்படும் ஆதார் பேஸ் ஆர்டி செயலியைப் பயன்படுத்துவதால், முக அங்கீகாரத்திற்கு வெளிப்புற பயோமெட்ரிக் சாதனங்கள் எதுவும் தேவையில்லை. வரும் மே 29ம் தேதி அன்றோ அல்லது அதற்கு முன்னரோ வாழ்வாதார உறுதிச் சான்றிதழைச் சமர்ப்பிக்க தவறினால், ஜூன் 2026 மாதம் முதல் ஓய்வூதியம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, வாழ்வாதார உறுதிச் சான்றிதழை சமர்ப்பித்த பின், ஓய்வூதியம் திரும்ப வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us