/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லாஸ்பேட்டை கொலையால் மக்கள் அச்சம்: எம்.எல்.ஏ., ஆய்வு
/
லாஸ்பேட்டை கொலையால் மக்கள் அச்சம்: எம்.எல்.ஏ., ஆய்வு
லாஸ்பேட்டை கொலையால் மக்கள் அச்சம்: எம்.எல்.ஏ., ஆய்வு
லாஸ்பேட்டை கொலையால் மக்கள் அச்சம்: எம்.எல்.ஏ., ஆய்வு
ADDED : அக் 07, 2025 01:01 AM

புதுச்சேரி. ; லாஸ்பேட்டையில் சமீபத்தில் கொலை நடத்த இடத்தை வைத்தியநாதன் எம்.எல்.ஏ., பார்வையிட்டு, அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
லாஸ்பேட்டை குடியிருப்புகள் மத்தியில் உள்ள கொல்லிமேடு மைதானத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் மது அருந்தியபோது, ரவுடிகளுக்குள்தகராறு ஏற்பட்டு, பிரதாப் என்ற ரவுடியை அவரது நண்பர்களே பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்தனர். அதனால், அப்பகுதி மக்கள்அச்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில், வைத்தியநாதன் எம்.எல்.ஏ., நேற்று கொலை நடத்த இடத்தை பார்வையிட்டு, அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அதில்,குடியிருப்பு மத்தியில் உள்ள மைதானத்தில் இரவு நேரங்களில் வெளிநபர்கள் அதிக அளவில் வந்து மது அருந்துவது, தகராறில் ஈடுபடுவதுதொடர்கதையாக உள்ளது. இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்தாலும், சரியான நடவடிக்கை எடுப்பவில்லை என குற்றச்சாட்டினர்.
இதையடுத்து, எம்.எல்.ஏ., போலீஸ் உயர் அதிகாரிகளிடம் இதுகுறித்து தெரிவித்து, இப்பகுதியில் பாதுகாப்பை அதிகப்படுத்தி, மது அருந்துவதைதடுக்கவும், இரவு நேரங்களில் போலீசாரின் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.