/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அதிகாரிகளிடம் மக்கள் வாக்குவாதம்; பாகூர் அருகே பதற்றம்
/
அதிகாரிகளிடம் மக்கள் வாக்குவாதம்; பாகூர் அருகே பதற்றம்
அதிகாரிகளிடம் மக்கள் வாக்குவாதம்; பாகூர் அருகே பதற்றம்
அதிகாரிகளிடம் மக்கள் வாக்குவாதம்; பாகூர் அருகே பதற்றம்
ADDED : ஜன 05, 2024 06:34 AM
பாகூர் : அரங்கனுாரில் கண்டெடுக்கப்பட்ட சுவாமி சிலைகளை கையகப்படுத்த சென்ற வருவாய்த் துறை அதிகாரிகளிடம் பொது மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
பாகூர் அடுத்த அரங்கனுார் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன், மண்ணில் புதைந்திருந்த சிவலிங்கம் மற்றும் ஒரு சித்தர் உருவ சிலையை அப்பகுதி மக்கள் கண்டெடுத்து வழிபட்டு வருகின்றனர்.
தகவல் அறிந்த பாகூர் தாசில்தார் கோபாலகிருஷ்ணன், சிலைகளை பார்வையிட்டு, இது குறித்து ஆய்வு மேற்கொள்ள தொல்லியல் துறைக்கு கடிதம் அனுப்பி இருந்தார். இதனிடையே, அப்பகுதி மக்கள் அங்கு ஒரு தகர கொட்டகை அமைத்து கோவில் கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக வருவாய் துறைக்கு தகவல் சென்றது.
இதையடுத்து, பாகூர் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் நேற்று மதியம் அரங்கனுார் கிராமத்திற்கு சென்று, இரண்டு சிலைகளையும் ஆய்வுக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
தகவலறிந்த அரங்கனுார் கிராம மக்கள் அங்கு திரண்டு வந்து, சிலைகளை கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் 'பூமியில் இருந்து கிடைத்த சிலைகளை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். கோவில் கட்டுவதாக இருந்தால், சம்மந்தப்பட்ட துறைகளிடம் உரிய அனுமதி வாங்கி, பணியை மேற்கொள்ள வேண்டும்.
அதுவரை எந்த பணியையும் மேற்கொள்ள கூடாது. இரண்டு நாட்களுக்குள் தாங்களாவே முன்வந்து சிலைகளை ஒப்படைத்திட வேண்டும் என, கூறிவிட்டு, சென்றார்.