ADDED : ஏப் 07, 2026 09:42 PM

புதுச்சேரி: லாஸ்பேட்டையில் காங்., வேட்பாளர் வைத்தியநாதன் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்.
லாஸ்பேட்டை தொகுதி காங்., கட்சி வேட்பாளர் வைத்தியநாதன் தொகுதி முழுதும் வீடு, வீடாக சென்று துண்டு பிரசுரம் கொடுத்து, கை சின்னத்துக்கு ஓட்டு சேகரித்து வந்தார்.
இந்நிலையில் தொகுதி முழுதும் காங்., வேட்பாளர் வைத்தியநாதன் தனது ஆதரவாளர்களுடன் இறுதிகட்ட பிரசாரத்தில் நேற்று ஈடுபட்டார்.
பிரசாரம் லாஸ்பேட்டை அய்யனார் கோவிலில் துவங்கி, ஜீவானந்தபுரம் இதயா கல்லுாரி அருகில் முடிந்தது.
அப்போது அவர் கூறுகையில், தொகுதியில் பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன். நான் செய்த பணிக்கு எனக்கு வாய்ப்பு தாருங்கள் என, கேட்டார். அவருக்கு தொகுதி மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பிரசாரத்தின் போது காங்., தலைவர் வைத்திலிங்கம், ரமா, கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
