/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காமராஜ் நகர் தொகுதி மக்களை சிரமப்படுத்த கூடாது: தேவதாஸ் வலியுறுத்தல்
/
காமராஜ் நகர் தொகுதி மக்களை சிரமப்படுத்த கூடாது: தேவதாஸ் வலியுறுத்தல்
காமராஜ் நகர் தொகுதி மக்களை சிரமப்படுத்த கூடாது: தேவதாஸ் வலியுறுத்தல்
காமராஜ் நகர் தொகுதி மக்களை சிரமப்படுத்த கூடாது: தேவதாஸ் வலியுறுத்தல்
ADDED : பிப் 07, 2026 03:26 AM

புதுச்சேரி: ரெயின்போ நகர் பகுதியில் பொதுமக்களுக்கு சிரமம் இல்லாத வகையில், மின் ஒயர் புதைக்கும் பணியை விரைந்து முடிக்க காங்., தொகுதி பொறுப்பாளர் தேவதாஸ் வலியுறுத்தினார்.
காமராஜ் நகர் தொகுதிக்குட்பட்ட ரெயின்போ நகர் முதல் லாஸ்பேட்டை வரை, பவர் கிரிட் நிறுவனம் மூலம் உயர் மின்னழுத்த ஒயர் புதைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காகத் தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியாக மூடப்படாததாலும், பணிகள் மந்தமாக நடந்து வருவதாலும், அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும், போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையறிந்த காமராஜ் நகர் தொகுதி காங்., பொறுப்பாளர் தேவதாஸ் அந்த பணிகளை பார்வையிட்டு, பணியின் தற்போதைய நிலை குறித்து ஒப்பந்ததாரரிடம் கேட்டறிந்தார். பின், மக்களைத் துன்புறுத்தும் வகையில் பணிகளைத் தாமதப்படுத்தக் கூடாது. போர்க்கால அடிப்படையில் பணிகளை விரைந்து முடித்து சாலையைச் சீரமைக்க வேண்டும் என, வலியுறுத்தினார்.
நகராட்சி ஆணையரை தொடர்பு கொண்டு வேலை முடிந்தவுடன் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றும் தேவதாஸ் கேட்டு கொண்டார். தேர்தல் பொறுப்பாளர் மருதுபாண்டி, காங்., அயலக அணியின் மாநில தலைவர் பரந்தாமன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தொடர்ந்து, ஒயர் புதைப்பதற்காக தோண்டப்பட்டு இருந்த பள்ளத்தை மூடும் பணிகள் வேகம் எடுத்துள்ளது. பல இடங்களில் பள்ளம் மூடப்பட்டு கான்கிரீட் போடப்பட்டு வருகிறது.

