/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதிய ஆண்டில் பல முக்கிய திட்டங்களை புதுச்சேரி மாநில மக்கள் பெறுவார்கள் வெங்கடேசன் எம்.எல்.ஏ., பொங்கல் வாழ்த்து

ADDED : ஜன 15, 2024 06:46 AM
புதுச்சேரி : புதுச்சேரி மக்களுக்கு பா.ஜ., எம்.எல்.ஏ., வெங்கடேசன் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
பொங்கல் பண்டிகையை புது பானையில் புது அரிசி இட்டு முற்றத்தில் பொங்கல் வைத்து மஞ்சள் கொத்தையும் கரும்பையும் காய்கறிகளையும் வைத்து வாழை இலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி கதிரவனை வணங்கி கொண்டாடி வருகிறோம்.
பிரதமர் தொகுதியான வாரணாசி பனாரஸ் இந்து பல்கலையில் சுப்பிரமணிய பாரதியார் பெயரில் இருக்கை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் பல மொழிகளிலும், திருக்குறளை மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார்.ஐ.நா., சபை கூட்டத்தில் கணியன் பூங்குன்றனாரின் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற முழக்கத்தை உலகமே கேட்கும் வகையில் அவர் முழங்கினார்.
வீடு தோறும் குடிநீர் வழங்கும் ஜல் ஜீவன் மிஷன், அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்கும் ஜந்தன் யோஜனா, இளைஞர்களின் மேம்பாட்டுக்காக ஸ்கில் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா போன்ற பிரதமரின் திட்டங்கள் மக்களை பெருமளவில் சென்றடைந்துள்ளன.
பிரதமரின் நேரடி கண்காணிப்பில் உள்ள கூட்டணி அரசு, நடப்பு ஆண்டுகளில் மிகப்பெரிய திட்டங்களை கொண்டு வர முயற்சித்து வருகிறது. நகரின் உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட உள்ளன. புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.