/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு வாரம் வாக்கத்தான் நிகழ்ச்சியில் மக்கள் பங்கேற்பு

ADDED : மார் 19, 2025 05:46 AM

புதுச்சேரி, : கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு குறித்து, கடற்கரை சாலையில் நடந்த வாக்கத்தான் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
உலக கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு வாரம் ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதையொட்டி, புதுச்சேரி கண் மருத்துவ சங்கம், இந்தியன் மருத்துவ சங்கம், புதுச்சேரி அனைத்து ரோட்டரி சங்கம் இணைந்து, கண் நீர் அழுத்தம் நோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வாக்கத்தான் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
புதுச்சேரி கடற்கரை சாலையில் நேற்று மாலை நடந்த வாக்கத்தான் நிகழ்ச்சியை, டி.ஐ.ஜி., சந்தியசுந்தரம் ஜி.எஸ்.டி., ஆணையர் மிலிந்த் லாஞ்ச்வர் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். சிறப்பு விருந்தினர்களாக ரோட்டரி மாவட்ட ஆளுநர் பாஸ்கரன், டாக்டர்கள் வனஜா வைத்தியநாதன், தணிகாசலம், சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில், 2500க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் கண் நீர் அழுத்தத்தை பரிசோதனை செய்து கொண்டனர். 40க்கும் மேற்பட்டவர்கள் கண்டிப்பாக கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில், பாண்டிச்சேரி ரோட்டரி பிரைடு சங்க தலைவர் கோபிநாதன், செயலர் அனுப், ஆனந்தன், அமித் குமார், இந்திய மருத்துவ சங்க தலைவர் சுதாகர் உட்பட மருத்துவர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.