/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
50 சவரன் நகையை மீட்டு ஒப்படைத்த வேன் டிரைவருக்கு மக்கள் பாராட்டு
/
50 சவரன் நகையை மீட்டு ஒப்படைத்த வேன் டிரைவருக்கு மக்கள் பாராட்டு
50 சவரன் நகையை மீட்டு ஒப்படைத்த வேன் டிரைவருக்கு மக்கள் பாராட்டு
50 சவரன் நகையை மீட்டு ஒப்படைத்த வேன் டிரைவருக்கு மக்கள் பாராட்டு
ADDED : ஜன 04, 2026 06:51 AM

காரைக்கால்: காரைக்காலில் சாலையோரம் கிடந்த 50 சவரன் நகையை மீட்டு ஒப்படைந்த வேன் டிவைரை பொதுமக்கள் பாராட்டினர்.
திருச்சி, காட்டூர் பகுதியை சேர்ந்தவர் மைக்கேல் அரோக், 54. இவர் தனது மனைவி உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார். இவரது மகள் ஆணி காரைக்கால் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று மைக்கேல் அரோக் தனது மகளை பார்க்க தனது மனைவியின் 50 சவரன் நகையை கைபேக்கில் எடுத்துக் கொண்டு, திருச்சியிலிருந்து கார் மூலம் காலை 11:00 மணிக்கு காரைக்கால் வந்து கொண்டிருந்தார்.
காரைக்கால், வாஞ்சியாறு புதிய பாலம் அருகே கார் சென்றபோது திடீரென மைக்கேல் அரோக் நகை வைத்திருந்த கைபேக்கை துாக்கி விசியுள்ளார். டிரைவர் கேட்டதற்கு தேவையில்லாத பேக் என, கூறியுள்ளார்.
அப்போது காரைக்கால் நகர் பகுதியை சேர்ந்த மினி லோடு வேன் ஒட்டி வந்த டிரைவர் மணிவண்ணன், 38, என்பவர் சாலையோரம் கிடந்த பேக்கை எடுத்து திறந்து பார்த்தபோது அதில், 50 சவரன் தங்க நகைகள், வெள்ளி கொலுசுகள், பாஸ்போர்ட், வாட்ச் உள்ளிட்ட பொருட்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின், அவர் தனது நண்பர்கள் உதவியுடன் நகர காவல் நிலையத்திற்கு சென்று நகை பேக்கை ஒப்படைந்தார்.
பின், திருநள்ளாறு காவல்நிலையத்தில் நடந்த மக்கள் மன்ற நிகழ்ச்சியில், எஸ்.பி., முருகையன் முன்னிலையில் நகை பையை எடுத்துக் கொடுத்த மணிவண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட மூவரை போலீசார் மற்றும் பொது மக்கள் பாராட்டினர். போலீசார் விசாரித்து நகையை உரிமையாளரிடம் ஒப்படைந்தனர்.

