/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மழையில் சேதமான மின் சாதனங்களை சாலையில் போட்டு மக்கள் மறியல்
/
மழையில் சேதமான மின் சாதனங்களை சாலையில் போட்டு மக்கள் மறியல்
மழையில் சேதமான மின் சாதனங்களை சாலையில் போட்டு மக்கள் மறியல்
மழையில் சேதமான மின் சாதனங்களை சாலையில் போட்டு மக்கள் மறியல்
ADDED : டிச 06, 2024 05:04 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் மழை நிவாரணத்தை உயர்த்தி வழங்க கோரி, நேரு எம்.எல்.ஏ., தலைமையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் 'பெஞ்சல்' புயலால், உப்பனாறு வாய்க்காலை ஒட்டி உள்ள கோவிந்தசாலை, கென்னடி நகர், சுப்பராய பிள்ளை சத்திரம், சாரதி நகர், சாந்தி நகர், இளங்கோ நகர், ராஜா நகர், அருந்ததி நகர், முத்தமிழ் நகர், அய்யனார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது.
இதனால், வீட்டில் இருந்த மின் சாதன பொருட்கள் சேதம் அடைந்தன. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும், ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.
இந்நிலையில் உருளையன்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட பொதுமக்கள் நேரு எம்.எல்.ஏ., தலைமையில் சேதம் அடைந்த டி.வி., உள்ளிட்ட மின்சாதன பொருட்களை ராஜா தியேட்டர் சிக்னல் அருகே நேற்று காலை சாலையில் போட்டு மறியலில் ஈடுபட்டனர்.ஆட்சியாளர்களை கண்டித்தும், நிவாரணம் உயர்த்தி வழங்க கோரியும் கோஷம் எழுப்பினர். எஸ்.பி., வம்சித ரெட்டி, பெரியக்கடை இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார், நேரு எம்.எல்.ஏ.,விடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.
அதன் பிறகு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால், அண்ணாசாலை, காமராஜர் சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.
நேரு எம்.எல்.ஏ., கூறுகயைில், 'முதல்வர் ரங்கசாமி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், பாதிக்கப்படாதவர்களுக்கும் ஒரே மாதிரி நிவாரணம் அறிவித்திருப்பது நியாயம் இல்லை.வருவாய் துறை மூலம் ஒவ்வொரு வீடாக கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம்' என்றார்.