/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'எச்.எம்.பி.வி., நோய் பற்றி மக்கள் பீதி அடைய வேண்டாம்'
/
'எச்.எம்.பி.வி., நோய் பற்றி மக்கள் பீதி அடைய வேண்டாம்'
'எச்.எம்.பி.வி., நோய் பற்றி மக்கள் பீதி அடைய வேண்டாம்'
'எச்.எம்.பி.வி., நோய் பற்றி மக்கள் பீதி அடைய வேண்டாம்'
ADDED : ஜன 09, 2025 05:59 AM
புதுச்சேரி: சீனாவில் மனித மெட்டாப் நியூமோ வைரஸ் எச்.எம்.பி.வி., நோய் பரவல் தொடர்பாக கவர்னர் கைலாஷ்நாதன் தலைமையில் ராஜ்நிவாஸில் உயர்மட்ட வழிநடத்துதல் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஆலோசனைக்கு பிறகு சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
எச்.எம்.பி.வி., நோய் பற்றி பொதுமக்கள் பீதியடைய வேண்டாம். இது நீண்டகாலமாகவே உள்ளது. சீனாவில் பாதிப்பு அதிகரிப்பதால் புதுச்சேரியில் சுகாதாரத்துறையானது தொடர் கண்காணிப்பும், விழிப்புணர்வுடன் செயல்படவும் அறிவுறுத்தப்பட்டது.
புதுச்சேயில் பாதிப்பு இல்லை. சுவாச நோய் தொடர்பாக நோயாளிகள் எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு ஏதும் இல்லை. புதுச்சேரியில் தற்போது ஆய்வக பரிசோதனை வசதி மற்றும் சிகிச்சை மையங்கள் தயார் நிலையில் உள்ளன.
குழந்தைகள், வயதானவர்களுக்கு தீவிர சுவாச நோய் இருப்பதாக பாதிப்புகள் பதிவானதால் பரிசோதனைக்கு ஜிப்மருக்கு அனுப்பப்படும்.
இந்திராகாந்தி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சோதனை செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

