புதுச்சேரியில் 99.7 டிகிரி வெயில் அனல் காற்றால் மக்கள் அவதி
புதுச்சேரியில் 99.7 டிகிரி வெயில் அனல் காற்றால் மக்கள் அவதி
ADDED : மே 20, 2026 04:33 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று 99.7 டிகிரி வெப்பம் பதிவாகி அனல் காற்று வீசியது.
இந்தாண்டு கோடை காலம் துவக்கத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. அக்னி நட்சத்திரம் கடந்த 4ம் தேதி துவங்கியது. அன்றைய தினம் மேகமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்தது. கடந்த 15ம் தேதி புதுச்சேரியில் அதிக பட்சமாக 7 செ.மீ., மழை பதிவானது. நகரப்பகுதியில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.
இந்த கோடை மழை குளிர்ச்சியை ஏற்படுத்தி, வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தியது. இந்நிலையில் வெயிலில் தாக்கம் மீண்டும் அதிகரித்தது. புதுச்சேரியில் நேற்று 99.7 டிகிரி வெப்பம் பதிவானது. சாலையில் அனல் காற்று வீசியதால் மக்கள் கடும் அவதியடைந்தனர்.
வெயில் அதிகமாக இருந்ததால், பகல் நேரத்தில் கடற்கரை, சுற்றுலாத்தளங்களில் மக்கள் கூட்டம் மிகவும் குறைவாக காணப்பட்டது.
