/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சஞ்சீவி நகர் சமுதாய நலக்கூடத்தில் அடிப்படை வசதியின்றி மக்கள் அவதி
/
சஞ்சீவி நகர் சமுதாய நலக்கூடத்தில் அடிப்படை வசதியின்றி மக்கள் அவதி
சஞ்சீவி நகர் சமுதாய நலக்கூடத்தில் அடிப்படை வசதியின்றி மக்கள் அவதி
சஞ்சீவி நகர் சமுதாய நலக்கூடத்தில் அடிப்படை வசதியின்றி மக்கள் அவதி
ADDED : மார் 31, 2025 07:26 AM
புதுச்சேரி : சஞ்சீவி நகர் சமுதாய நலக்கூடத்தில் அடிப்படை வசதி இல்லாமல் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காலாப்பட்டு தொகுதியை சேர்ந்த சஞ்சீவி நகர் கிராமத்தில், நுாற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள மக்கள் தங்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு வசதியாக, இப் பகுதியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன், சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது.
இதன் மூலம் சஞ்சீவி நகர் பகுதி மக்கள் மட்டுமின்றி, தமிழக பகுதியை சேர்ந்த துருவை, ஒட்டம்பாளையம் மக்களும் பயன்பெற்று வருகின்றனர். ஆனால், சமுதாய நலக்கூடத்தில் சமையல் செய்வதற்கும், உணவு சாப்பிடுவதற்கும் வசதி செய்து தரப்பட வில்லை.
கீழ் தளத்தில், நிகழ்ச்சி அரங்கம் மட்டுமே உள்ளது. மேல் தளத்தில் கூரை அமைக்காததால், பகல் நேரங்களில் டெண்ட் அமைத்து சாப்பாடு பரிமாறப்படுகிறது.
மழைக்காலங்களில் இங்கு நிகழ்ச்சி நடத்த முடியவில்லை. மேலும் தண்ணீர் வசதி கூட கிடையாது. இதனால் தனியார் மண்டபத்தில் அதிக பணம் செலவு செய்து, சுப நிகழ்ச்சி நடத்த வேண்டியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் மேற்கூரை அமைத்து தர யாரும் முன்வரவில்லை. எனவே, சமுதாய நலக்கூடத்தின் மேல் தளத்தில் கூரை அமைத்து தரநடவடிக்கை எடுக்க வேண்டும்.