ரங்கசாமி ஆட்சி தொடர மக்கள் ஆதரவு: என்.ஆர்.காங்., வேட்பாளர் நாராயணசாமி
ரங்கசாமி ஆட்சி தொடர மக்கள் ஆதரவு: என்.ஆர்.காங்., வேட்பாளர் நாராயணசாமி
ADDED : மார் 30, 2026 06:50 PM

புதுச்சேரி: உழவர்கரை தொகுதியில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்ட என்.ஆர்.காங்., வேட்பாளர் நாராயணசாமி கூறியதாவது:
என்.ஆர்.காங்., சார்பில் உழவர்கரை தொகுதியில் நான் போட்டியிடுகிறேன். முதல்வர் ரங்கசாமி மீது மக்கள் மத்தியில் நன்மதிப்பு உள்ளது. அவரது ஆட்சியில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் பயன்பெறும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, மகளிர் மற்றும் முதியோர் உதவித்தொகை உயர்வு, இலவச அரிசி திட்டம் மற்றும் மாணவர்களுக்கு லேப்டாப் என பல திட்டங்களை அவர் நிறைவேற்றியுள்ளார். அவரது நல்லாட்சி மீண்டும் தொடர மக்கள் ஆர்வமாக உள்ளனர்.
கடந்த மூன்று ஆண்டுகளாக உழவர்கரை தொகுதி என்னால் முடிந்த சில பணிகளையும் ஏற்கனவே செய்து கொடுத்துள்ளேன். தற்போது சாலை, கழிவு நீர் வாய்க்கால் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு மற்றும் மின்விளக்குகள் சரியாக எரிய தீர்வு காண்பதே என் முதல் வேலை.
ஒரு பயனாளி கூட விடுபடாத வகையில் அனைத்து அரசுத் திட்டங்களையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பேன். பெண்களுக்குத் தையல் பயிற்சி, மாணவர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித்து, பெரிய நிறுவனங்களுடன் இணைந்து வேலைவாய்ப்பை உறுதி செய்வேன். தொகுதியில் உள்ள விளையாட்டு மைதானங்களை நவீனப்படுத்தப்படும்.
மக்களிடம் எனக்கு நல்ல வரவேற்பு உள்ளது. மக்கள் ஜக்கு சின்னத்தில் ஓட்டு அளித்து நிச்சயம் என்னை வெற்றி பெற செய்வார்கள்.
