UPDATED : அக் 12, 2026 06:56 PM
ADDED : அக் 12, 2026 06:37 PM
அ நிறம் | அளவு
நெட்டப்பாக்கம்: மடுகரையில் நுாறு நாள் வேலை கேட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மடுகரை கிழக்கு மற்றும் மேற்கு என இரண்டு பஞ்சாயத்துகள் உள்ளன. கடந்த சில மாதங்களாக மேற்கு பஞ்சாயத்திற்கும் மட்டும் வேலை உறுதி திட்டத்தில் வேலை வழங்குவதாகவும், கிழக்கு பஞ்சாயத்திற்கு வேலை வழங்கப்படவில்லை என்று பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகின்றது. இதனை கண்டித்து நேற்று காலை 10மணி அளவில் மடுகரை–புதுச்சேரி சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
தகவலறிந்த மடுகரை சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனைத் தொடர்ந்து சாலை மறியல் 10.30 மணிக்கு கைவிடப்பட்டது.
