தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/வீடுகளுக்கு சோலார் பேனல் விரும்பும் பொதுமக்கள் அஞ்சலகத்தை அணுகலாம்

வீடுகளுக்கு சோலார் பேனல் விரும்பும் பொதுமக்கள் அஞ்சலகத்தை அணுகலாம்

வீடுகளுக்கு சோலார் பேனல் விரும்பும் பொதுமக்கள் அஞ்சலகத்தை அணுகலாம்


ADDED : பிப் 29, 2024 05:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 29, 2024 05:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வீடுகளுக்கு சோலார் பேனல் அமைக்கும் திட்டத்தில் இணைய விரும்பும் பொதுமக்கள் அருகில் உள்ள அஞ்சலகத்தை அணுகி விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

புதுச்சேரி அஞ்சலகங்களின் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் துரைராஜன் வெளியிட்ட செய்திகுறிப்பு:

வீடுகளில் சோலார் பேனல் அமைத்து பேட்டரிகளில் மின்சாரத்தை சேமித்து மக்களே பயன்படுத்த முடியும் என்ற நிலையில், மாதந்தோறும் 300 யூனிட் வரை மின்சாரம் இலவசம் என்ற மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த திட்டத்தில் இணைவோர், தங்களுடைய வீடுகளுக்கு தேவையான மின்சாரத்தை பெறலாம். இதன் மூலம் உபரி மின்சாரத்தை வினியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 15 முதல் ரூ. 18 ஆயிரம் வரை மிச்சப்படுத்தலாம்.

இந்த திட்டத்தில் இணைய விருப்பம் உள்ள பொதுமக்களின் விபரங்களை சேகரிக்கும் பணியை அஞ்சலகத்தில் பணி புரியும் போஸ்ட்மேன்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அரிய வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி கொண்டு, அருகில் உள்ள அஞ்சலகங்களில் விபரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us