/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நடிகர் விஜய் தலைவிதியை மக்கள் முடிவு செய்வர்
/
நடிகர் விஜய் தலைவிதியை மக்கள் முடிவு செய்வர்
ADDED : டிச 07, 2024 07:03 AM
தமிழக காங்., மாஜி தலைவர் கருத்து
புதுச்சேரி: நடிகர் விஜய் தலைவிதியை மக்கள் முடிவு செய்வர் என, தமிழக காங்., முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.
புதுச்சேரியில், அவர் கூறியதாவது;
புயல் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தமிழகம், புதுச்சேரியை தேசிய பேரிடர் பாதிப்பு பகுதியாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட மழை நிவாரண தொகை மிக குறைவு. மத்திய அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டும்.
நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்தது, புயல் பாதித்த மக்களை வரவழைத்து உதவி செய்வது வரவேற்கதக்கது. பாதிக்கப்பட்ட பகுதிக்கு அவர் சென்றிருக்கலாம். அவர் நடிகர் என்பதால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்றால் கூட்டம் வரும். அதனால் அவர், செல்லாமல் இருக்கலாம்.
மக்களை சந்திக்காமல் கட்சி நடத்த முடியாது. விஜய் பிரபலமான நடிகர்; உச்சத்தில் இருப்பவர். சிரஞ்சிவி கட்சி ஆரம்பித்தபோது, பல லட்சம் பேர் கூடினர். ஆனால் முதல்வராக வர முடியவில்லை.
அதை முடிவு செய்வது மக்கள். அவர்கள் எஜமானர்கள். விஜய் புதிதாக வந்துள்ளார். யூகத்தின் அடிப்படையில் தலைவிதியை எழுத வேண்டியதில்லை. மக்கள் முடிவு செய்வர்' என்றார்.