/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலீஸ் ஸ்டேஷன்களில் இன்று மக்கள் மன்றம்
/
போலீஸ் ஸ்டேஷன்களில் இன்று மக்கள் மன்றம்
ADDED : ஏப் 19, 2025 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி:
புதுச்சேரியில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று (19ம் தேதி) காலை 11:00 மணி முதல் 1:00 மணி வரை மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடக்கிறது.
அதன்படி, லாஸ்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் நிகழ்ச்சியில், டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் தலைமை தாங்கி, பொது மக்களிடம் குறைகளை கேட்க உள்ளார்.
இதேபோல், கரையாம்புத்துார் போலீஸ் ஸ்டேஷனில் சீனியர் எஸ்.பி., கலைவாணன் தலைமையிலும், ஒதியஞ்சாலை, நெட்டப்பாக்கம் போலீஸ் ஸ்டேஷன்களில் எஸ்.பி.,க்கள் தலைமையிலும் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடக்கிறது. மேலும், புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனிலும் எஸ்.பி., தலைமையில் மக்கள் மன்றம் இன்று நடக்கிறது.