ADDED : ஏப் 24, 2026 08:04 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி போலீஸ் ஸ்டேஷன்களில் இன்று (25ம் தேதி) மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடக்கிறது.
புதுச்சேரி போலீஸ் ஸ்டேஷன்களில் வாரந்தோறும் சனிக்கிழமையில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடந்து வருகிறது. அதில், மக்கள் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக, போலீஸ் அதிகாரிடம் புகார் மனு அளித்து, அதற்கு உடனடியாக தீர்வு காண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று (25ம் தேதி) புதுச்சேரி ரெட்டியார்பாளையம் போலீஸ் ஸ்டேஷன், சோலை நகர் மற்றும் கரையாம்புத்துார் புறக்காவல் நிலையத்திலும், திருக்கனுார், மாகியில் உள்ள பள்ளூர், ஏனாம் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடக்கிறது.
காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கும் மக்கள் மன்றத்தில், மக்கள் பங்கேற்று மனு அளிக்கலாம்.
