ADDED : மே 23, 2026 03:56 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி போலீஸ் ஸ்டேஷன்களில் இன்று மக்கள் மன்றம் நடக்கிறது.
புதுச்சேரி போலீஸ் ஸ்டேஷன்களில் ஒவ்வொரு சனிக்கிழமையும் மக்கள் மன்றம் நடந்து வருகிறது.
பொதுமக்கள் அதிகாரிகளிடம் கொடுக்கும் புகார் மனுக்கள் மீது மக்கள் மன்றத்தில் உடனடியாக தீர்வு காணப்பட்டு வருகிறது.
இந்நிலையில், புதுச்சேரி காலாப்பட்டு போலீஸ் ஸ்டேஷன் இன்று மக்கள் மன்றம் நடக்கிறது. அதே போன்று, மேட்டுப்பாளையம், அரியாங்குப்பம், மங்கலம், மாகி ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில் மக்கள் மன்றம் காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது.
